அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் உற்பத்திக்கான ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 12:23PM by PIB Chennai

ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியத்தின் கீழ் ரூ.130 கோடி மதிப்பிலான  உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் கையெழுத்திட்டுள்ளது.

முக்கியதத்துவம் வாய்ந்த, வளர்ந்து வரும் பயன்பாடுகளுக்கான உள்நாட்டு செமிகண்டக்டர் திறன்களை மேம்படுத்தும் மத்திய அரசின்  முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பெங்களூருவைச் சேர்ந்த பிக்எந்தியன்  செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தின் கீழ், ரூ.130 கோடி நிதி உதவி வழங்கப்படும்.  

வீர்-ஏஐ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.260 கோடியாகும். இது தொழில்நுட்பத் தயார்நிலையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிதி உதவி விருப்பத்தின் பேரில் பங்குத் தொகையாக மாற்றக்கூடிய கடன் நடைமுறை மூலம் வழங்கப்படும். பாதுகாப்பான, அறிவுசார், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான செமிகண்டக்டர் தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்பத் தளத்தில் தயாரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட செமிகண்டக்டர், தொழில்நுட்ப விநியோக நடைமுறைகள் மீதான சார்புநிலையைக் குறைக்கும் வகையில், கண்காணிப்புப் பயன்பாடுகளுக்கான, குறிப்பாக சிசிடிவி அமைப்புகளுக்கான, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு சிப்பை உருவாக்குவதை இத்திட்டம் மையமாகக் கொண்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319038&reg=3&lang=1   

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319212) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Gujarati , हिन्दी , Marathi , Assamese , Bengali