ஊரக வளர்ச்சி அமைச்சகம்
3டி தொழில்நுட்பத்தில் கட்டப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்ட வீடுகள் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் ஆந்திராவில் அடிக்கல் நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 5:11PM by PIB Chennai
மத்திய வேளாண் துறை அமைச்சரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான திரு சிவராஜ் சிங் சௌகான், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், புரிபாலம் கிராமத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரூ. 3,600 கோடி மதிப்பிலான 3 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. ஆந்திர முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில், ₹14 கோடி செலவில் 177 வீடுகளைக் கொண்ட, முப்பரிமாண (3டி) கான்கிரீட் அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாட்டின் முதல் முன்னோடி வீட்டுவசதித் திட்டத்திற்கும் திரு சிவராஜ் சிங் சௌகான் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு ஆகியோர் தலைமையிலான மத்திய, மாநில ஆந்திராவின் வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் விரைவுபடுத்தி, நாட்டின் முதல் மாநிலமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
ஆந்திர மாநிலந்த்தின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த திரு சௌகான், ஆரம்ப ஒதுக்கீடு 76,000 வீடுகள் மட்டுமே என்றும், இருப்பினும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த ஒதுக்கீடு 3 லட்சம் வீடுகளாக அதிகரிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். ஆந்திராவுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் உறுதியளித்தார்.
முப்பரிமாண கான்கிரீட் அச்சுத் தொழில்நுட்பம் மூலம் கட்டப்படும் 177 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானி, மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், ஆயிரக்கணக்கான விவசாயிகள், கிராமப்புற மக்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318899®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319166)
வருகையாளர் எண்ணிக்கை : 9