பிரதமர் அலுவலகம்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 9:53PM by PIB Chennai
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடையும் வேளையில், உறுதியுடனும், ஆர்வத்துடனும், சிறப்பான விளையாட்டு மனப்பான்மையுடனும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டிற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தேடித்தந்த விளையாட்டு வீரர்களைப் பிரதமர் வாழ்த்தினார்.
வரும் ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் இன்னும் பெரிய சாதனைகளுக்கு ஊக்கமளிப்பதுடன், அடிமட்ட அளவில் விளையாட்டுகளை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடையும் வேளையில், உறுதிப்பாடு, ஆர்வம், சிறப்பான விளையாட்டு உணர்வுடன் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டிற்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தேடித்தந்த பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
வருங்காலத்தில் இந்தப் போட்டிகள் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கட்டும். அத்துடன், அடிமட்ட அளவிலும் விளையாட்டுகளை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வாழ்த்துகிறேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318948®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319120)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati