பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கோல்ஃப் குழு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக், பிரணவி ஷரத் அர்ஸ், திக்ஷா தாகர் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 9:53AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குழு கோல்ஃப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக், பிரணவி சரத் அர்ஸ், தீக்ஷா தாகர் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் வெற்றி, விளையாட்டின் மீதான அவர்களின் உறுதியையும் பேரார்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
அதிதி அசோக், பிரணவி சரத் அர்ஸ், தீக்ஷா தாகர் ஆகியோருக்குத் தொடர் வெற்றி கிடைக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, வரும் காலங்களில் அவர்கள் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் குழு கோல்ஃப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக், பிரணவி சரத் அர்ஸ், தீக்ஷா தாகர் ஆகியோருக்குப் பாராட்டுகள். இந்த வெற்றி, விளையாட்டின் மீதான அவர்களின் உறுதியையும் பேரார்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வரும் காலங்களில் அவர்கள் தொடர்ந்து புதிய வெற்றி உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்: பிரதமர் நரேந்திரமோடி"
****
(Release ID: 2318818)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318856)
வருகையாளர் எண்ணிக்கை : 6