நிதி அமைச்சகம்
தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட கஞ்சா ராஜஸ்தானில் பறிமுதல் - மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 3:19PM by PIB Chennai
போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, உளவுத் தகவல் அடிப்படையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் தாய்லாந்திலிருந்து பெறப்பட்ட ஒரு சர்வதேச பார்சலை மத்திய போதைப்பொருள் பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.080 கிலோ நீரியல் வளர்ப்பு கஞ்சாவை (ஹைட்ரோபோனிக் கஞ்சா) மத்திய போதைப்பொருள் தடுப்பிப் பிரிவினர் கைப்பற்றினர்.
அந்தப் பார்சலை விரிவாகப் பரிசோதித்தபோது, அட்டைப்பெட்டிக்குள் பல கேக் பாக்கெட்டுகளும் மற்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கவனித்தனர். மேலும் ஆய்வு செய்ததில், கடத்தல் பொருளை மறைக்கும் முயற்சியாக, மற்ற கேக் பாக்கெட்டுகள், பொருட்களுடன், கஞ்சா சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318179®=3&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318649)
வருகையாளர் எண்ணிக்கை : 6