உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லடாக் யூனியன் பிரதேசத்தில், நில அளவைத் துறை வரைபடத்தில், 28 இடங்களை இந்தியப் பெயர்களுடன் அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 9:31AM by PIB Chennai

மத்திய அரசு, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, இந்திய நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின் மூலம் அடையாளம் கண்டு, லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள மொத்தம் 28 இடங்களுக்கு நிலையான இந்திய பெயர்களைச் சூட்டி அடையாளப்படுத்தியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் இப்பகுதிகளைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்கும், பொதுமக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது உதவும்.

லடாக் யூனியன் பிரதேசத்தின் இந்திய நில அளவை வரைபடத்தில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 28 இடங்கள் பின்வருமாறு:

1) அதிஷா கிரி - மலைச் சிகரம்

2) பிராங்சா - நிலப்பரப்பு

3) சாப்சிங்கல் - கணவாய்

4) கனிஷ்கா -   மலைச் சிகரம்

5) கருண் பிர் -மலை

6) குக்செல் - நிலப்பரப்பு

7) மார்த்தாண்ட் கிரி - மலைச் சிகரம்

8) பார்பிக் - பனிப்பாறை

9) ஸ்கம்ரி - பனிப்பாறை

10) ஷாக்மிர்க் - கணவாய்

11) ஷ்கோர்கா - பள்ளத்தாக்கு

12)  ஜோராவர் - மலைச் சிகரம்

13) டெஹ்ரா காம்பஸ் - நிலப்பரப்பு

14) டிராகன் கார்போ - மலை

15) கோக்ரா - நிலப்பரப்பு

16) ஜோல்மோரி - மலை

17) குமாரயாண பாயிண்ட் - நிலப்பரப்பு

18) பாங்லுங் - நிலப்பரப்பு

19) ரின்சென் ஜாங்போ - மலைச் சிகரம்

20) சாக்யஸ்ரீ கிரி - மலைச் சிகரம்

21) குரு ரின்போச்சே - ஏரி

22) ஷமல் லுங்பா - நிலப்பரப்பு

23) ஹாங்பா - நதி

24) ஹாட் ஸ்பிரிங் (வெந்நீர் ஊற்று) - நீர்நிலை

25) மார்பா லோட்சாவா ரி - மலைச் சிகரம்

26) மிலரேபா கங்ரி - மலைச் சிகரம்

27)  சிவா ரி - மலைச் சிகரம்

28) மகேஸ்வர ரி - மலைச் சிகரம்

கூடுதல் இடங்கள் / அம்சங்களுடன் கூடிய லடாக் வரைபடத்தை https://surveyofindia.gov.in/pages/state-maps என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318027&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318634) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Malayalam