பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 7:22PM by PIB Chennai

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு அணியின் அற்புதமான திறனும் கூட்டு முயற்சியுமே காரணம் என்று கூறிய பிரதமர், வீராங்கனைகளின் மன உறுதி ஊக்கமளிக்கும் விதமாக அமைந்திருப்பதாகப் பாராட்டினார்.

அணியின் அடுத்தகட்ட முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திரு மோடி, இந்த வெற்றி நாடு முழுவதும் ஹாக்கி விளையாட்டின் புகழை அதிகரிக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாவது:

“இந்திய ஹாக்கிக்கு இது ஒரு மிகச் சிறப்பான தருணம்!

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பின், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ள மகளிர் ஹாக்கி அணியின் வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது அணியினரின் சிறப்பான திறமை மற்றும் கூட்டு முயற்சியின் விளைவாகும். அவர்களின் மனவுறுதியும் மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. அணியின் அடுத்தகட்ட முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.

இந்த வெற்றி, நாடு முழுவதும் ஹாக்கி விளையாட்டின் புகழை அதிகரிக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318340&reg=3&lang=1   

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318578) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati