பிரதமர் அலுவலகம்
மகாத்மா காந்தியின் சத்தியம், அகிம்சை, கருணை, சேவை ஆகிய கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமான சமஸ்கிருத நீதி மொழி ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 9:11AM by PIB Chennai
மகாத்மா காந்தியின் முழு வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை, சேவையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவருடைய வாழ்க்கையும் கொள்கைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலத்தின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை எடுத்துரைக்கும் விதமான சமஸ்கிருத நீதி மொழி ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
எந்த உயிரினத்தின் மீதும் வெறுப்பு கொள்ளாத, அனைவரையும் நட்புடனும் கருணையுடனும் அரவணைக்கும், பற்றும் அகங்காரமும் இல்லாத, இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையுடன் இருக்கும், எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்ட ஒருவரே உயர்ந்தவர் என்று அந்த நீதிமொழி கூறுகிறது.
(Release ID: 2318025)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2318251)
வருகையாளர் எண்ணிக்கை : 8