நிதி அமைச்சகம்
மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 4:43PM by PIB Chennai
தங்கக் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் மும்பை மண்டலப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், உளவுத்துறை தகவலின் பெயரில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மும்பை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, துபாயில் இருந்து மும்பைக்கு வந்த 3 பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, வெளிநாட்டுத் தங்கம், நுண்ணிய துகள்களாக மாற்றப்பட்டு, சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தத் தங்க துகள்கள், பால் பவுடர், ஓட்ஸ் போன்ற மாவுப் பொருட்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
9.40 கிலோ எடை கொண்ட ரூ.14.81 கோடி மதிப்பிலான வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 1962-ம் ஆண்டின் சுங்கவரி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 3 பயணிகளும் இந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314896®=3&lang=3
***
TV/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317989)
வருகையாளர் எண்ணிக்கை : 43