மக்களவை செயலகம்
மக்களவை முன்னாள் தலைவர் திரு ஜிஎம்சி பாலயோகிக்கு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 3:03PM by PIB Chennai
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று (01.10.2026), மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவர் ஜிஎம்சி பாலயோகியின் பிறந்தநாளை முன்னிட்டு, சம்விதான் சதன் எனப்படும் பழைய நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில், மாநிலங்களவையின் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், பிற முக்கிய பிரமுகர்களும் பாலயோகியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
ஜிஎம்சி பாலயோகி 12-வது மக்களவையின் சபாநாயகராக இருந்தார். மீண்டும் 13-வது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாலயோகியின் உருவப்படத்தை, ஹிம் சாட்டர்ஜி வரைந்தார். இது பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் வெளி முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதனை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317578®=3&lang=1
-----
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317871)
வருகையாளர் எண்ணிக்கை : 7