பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாளை நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் - கிராமப்புற மேம்பாடு குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 12:52PM by PIB Chennai

ஊராட்சிகளை வலுப்படுத்தி, பொதுச் சேவைகளை மேம்படுத்தி, கிராமப்புறங்களில் மக்களில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக, நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நாளை (2026 அக்டோபர் 2) நடைபெறும். இதில், "அனைவரின் திட்டம், அனைவரின் வளர்ச்சி" என்ற 2026-27-ம் ஆண்டுக்கான மக்கள் திட்ட இயக்கமும் தொடங்கப்படும்.

இதன் கீழ், கிராம ஊராட்சிகள், திட்டமிடல் மூலம் 2027-28-ம் நிதியாண்டிற்கான தங்களின் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கும். இந்தக் கிராம சபை விவாதங்கள், முக்கிய அரசுத் திட்டங்களின் செயலாக்கத்தை ஆய்வு செய்யவும், உள்ளூர் தேவைகளையும் அதில் நிலவும் இடைவெளிகளையும் கண்டறியவும் உதவும்.  இது கிராமங்களின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க மக்களையும் உள்ளூர் பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்கும்.

ஸ்வாமித்வா திட்டம், வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலை உறுதித் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் இயக்கம், கிராமப்புறங்களில் திட, திரவக் கழிவு மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, டிஜிட்டல் முறையில் நிலப்பதிவேடுகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் இந்த கிராம சபை கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317494&reg=3&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317752) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada