தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான ஊடகவியலாளர்கள் பதிவு தொடங்கியது

2026 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவின் பனாஜியில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விழாவில், திரைப்படத் திரையிடல்கள், கலந்துரையாடல்கள், திரைப்படக் குழுவினர் சந்திப்புகள் போன்றவை இடம்பெறும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில்  ஊடகவியலாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். செய்திகள், நேர்காணல்கள், விமர்சனங்கள், சிறப்புக் கட்டுரைகள், டிஜிட்டல் ஊடகப் பரப்புரை ஆகியவற்றின் மூலம், இந்த விழாவை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்கள் உதவுகின்றன.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்கள், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகார இணையதளமான https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx என்ற இணையதள இணைப்பின் மூலம் இன்று முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317574&reg=3&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317716) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Kannada , Malayalam