பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டி - வில்வித்தை மகளிர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 1:57PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் மகளிர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணம், பிரித்திகா பிரதீப், சிக்கிதா தனிபார்த்தி ஆகியோர் கொண்ட இந்திய அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாக உலகச் சாதனையை சமன் செய்த இந்த வெற்றி மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனைகளின் இந்த வெற்றி மகத்தான சாதனை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒட்டுமொத்த அணிக்கும், அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் மகளிர் ஒருங்கிணைந்த குழுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணம், பிரித்திகா பிரதீப், சிக்கிதா தனிபார்த்தி ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு, உலக சாதனையை சமன் செய்துள்ளதன் மூலம் மேலும் சிறப்பானதாக அமைகிறது. இந்த வெற்றி, வில்வித்தை வீராங்கனைகளின் மகத்தான சாதனையாகும். ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துகள்."

***

(Release ID: 2316904)

TV/SV/RJ/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317161) வருகையாளர் எண்ணிக்கை : 6