இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 9:57AM by PIB Chennai
பயணிகள் வாகனங்களுக்கான புதிய பெருநிறுவன சராசரி எரிபொருள் சிக்கன விதிமுறைகளை மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறைகள், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் புதிய பயணிகள் வாகனங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.
இந்தப் புதிய விதிமுறைகளுக்கான அறிவிப்பு ஐந்து ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் இதற்கான இலக்குகளை கடுமையாக்குவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிமுறைகள், வாகன உற்பத்தியாளர்களுக்குத் தூய்மையான தொழில்நுட்பங்கள், மாற்று எரிபொருள், பிற புதுமையானத் தீர்வுகளை உருவாக்குவதற்கான சூழல் அமைப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் புதிய எரிபொருள் சிக்கன விதிமுறை, நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதைக் கருத்தில் கொண்டு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வண்ணப்பூச்சுகள், நவீன கண்ணாடிகள், உயர் செயல்திறன் கொண்ட குளிரூட்டும் கருவிகள் போன்றவற்றில் புதியக் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது.
நாட்டின் போக்குவரத்துக்கான எரிசக்தி தேவையில் பயணிகள் வாகனப் பிரிவு கணிசமான பங்களிப்பைக் கொண்டுள்ளதுடன், புதைப்படிவ எரிபொருள் பயன்பாட்டிற்கு முக்கியத் துறையாகவும் உள்ளது. தொழில்நுட்ப புத்தாக்க நடவடிக்கைகள், நாட்டின் வாகனத்துறையை மேம்படுத்துவதுடன், குறைந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316792®=3&lang=1
***
TV/SV/RJ/GS