பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டவிரோத தத்தெடுத்தலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பயிலரங்கு மணிப்பூரில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 4:01PM by PIB Chennai

மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்தியத் தத்தெடுப்பு வள ஆணையம், மணிப்பூரின் இம்பால், வடக்கு ஏஓசி பகுதியில் சட்டப்பூர்வத் தத்தெடுப்பு. பாதுகாப்பான குழந்தைப்பருவம். பாதுகாப்பான எதிர்காலம். சட்டவிரோதத் தத்தெடுப்பை வேண்டாம் என்று கூறுவோம் என்ற தலைப்பில் தத்தெடுப்பு விழிப்புணர்வுப் பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தது. மணிப்பூர் அரசின் சமூக நலத்துறை, மணிப்பூர் மாநில தத்தெடுப்பு வள முகமை ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

மணிப்பூர் சமூக நலத்துறையின் இயக்குநர் திரு ஷேக் அப்துல் ஹக்கீம்,  இம்பால் மேற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி கே சுந்தர்பாலா, மத்திய தத்தெடுப்பு வள ஆணைய உதவி இயக்குநர்கள் திருமதி ரூபன்ஷி பாண்டே, திருமதி அங்கிதா பரத்வாஜ் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது. சட்டப்பூர்வமான, வெளிப்படையான, குழந்தையின் நலனை மையமாகக் கொண்ட தத்தெடுப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தவும், சட்டவிரோத தத்தெடுப்பு முறைகளால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை எடுத்துரைக்கவும் சுமார் 150 பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313900&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316606) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri