நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம், மிசோரம் மாநிலங்களிலிருந்து ரூ.20 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பாக்கு, நறுமணப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 4:42PM by PIB Chennai

எல்லைத்தாண்டிய சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், உளவுத்துறை அளித்த தகவலின் பெயரில் மிசோரம், அசாம் மாநில எல்லைப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்த இருவேறு சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட ரூ.20.31 கோடி மதிப்பிலான ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 680 கிலோ வெளிநாட்டுப் பாக்கு வகைகள், 41,697 கிலோ நறுமணப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதிகளிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பாய் மாவட்டம், அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அமைந்துள்ள 3 கிடங்குகளில் சுங்கத்துறை, அசாம் ரைபிள்ஸ், காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314894&reg=48&lang=2

***

TV/SV/RJ/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316480) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi