சுற்றுலா அமைச்சகம்
தூய்மையை பராமரிக்கவும், நிலுவையில் உள்ள பணிகளை குறைக்கவும் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ செயல்படுத்த சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 11:37AM by PIB Chennai
அரசு அலுவலகங்களில் தூய்மையை பராமரிக்கவும், நிலுவையில் உள்ள பணிகளை குறைப்பதில் கவனம் செலுத்தும் வகையிலும் 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை மத்திய அரசால் மேற்கொள்ளப்படவுள்ள தூய்மைப்பணிகளுக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ செயல்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான தூய்மை இயக்கத்தில் மின்னணு கழிவுகளை திறம்பட சேகரித்தல், வகைப்படுத்துதல், அவற்றை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் ஒரு அங்கமாக மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகள், துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுச்சேவைகளை வழங்கும் கள அலுவலகங்கள் ஆகியவற்றில் தூய்மையை பராமரிப்பதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316364®=3&lang=1
***
SS/SV/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316467)
வருகையாளர் எண்ணிக்கை : 9