பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜனுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 8:33PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது சிறப்பான, உற்சாகம் நிறைந்த செயல்பாடு நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், வரும் காலங்களில் அவர் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜனுக்கு வாழ்த்துகள்! அவரது சிறப்பான, உற்சாகம் நிறைந்த செயல்பாடு, நாட்டிற்குப் பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர் வரும் காலங்களிலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315646®=3&lang=1
***
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316419)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam