பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிதா பத்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 8:29PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிதா பத்ராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரிலேயே மிகுந்த தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் போட்டியிட்டு, வெற்றியைப் பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்ததற்காகப் பிரதமர் அவரைப் பாராட்டினார். இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டிய திரு மோடி, அவரது சாதனையால் இந்தியா பெருமிதம்  கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரிதா பத்ரா சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்! தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அவர், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் போட்டியிட்டு,  தகுதியான வெற்றியைப் பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்துள்ளார். இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315642&reg=3&lang=1  

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316406) வருகையாளர் எண்ணிக்கை : 12