வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
முதலீடு, புத்தாக்கம் மூலம் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் நட்புறவு மேலும் வலுப்படும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 3:56PM by PIB Chennai
இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு உயர்மட்ட கூட்டு பணிக்குழுவின் 14-வது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், அபுதாபி முதலீட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் ஷேக் ஹமித் பின் சயித் அல்நஹ்யான் ஆகியோர் தலைமை வகித்தனர். இரு நாடுகள் இடையேயான முதலீட்டு வாய்ப்புகள், முதலீட்டாளர்கள் சந்திக்கும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எரிசக்தி, தொழில்துறை, தளவாடங்கள், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு, உணவு பாதுகாப்பு, வேளாண் துறை மேம்பாடு போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து இருநாட்டு பிரதிநிதிகளும் ஆலோசனை நடத்தினர். இந்தியா, அபுதாபி இடையேயான விமான போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்தும், இதன்மூலம் இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியகூறுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உலகளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடான இந்தியா, நிலையான வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்தியாவின் உண்மையான தோழனாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்துடன், முதலீடு, பாதுகாப்பு தொடர்பாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315968®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316196)
வருகையாளர் எண்ணிக்கை : 9