நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தங்க கடத்தல் முயற்சியை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளதுடன் 10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 2:57PM by PIB Chennai

தங்க கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நாடு முழுவதும் தங்க கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர். அவர்களது இந்த நடவடிக்கைகளின் போது ரூ.10.36 கோடி மதிப்பிலான 6.61 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 9 மாதங்களில் கூரியர் தபால் வழியாக ரூ.475 கோடி மதிப்பிலான 318 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தங்க கடத்தல் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கூரியர் தபால் முறைகளை பயன்படுத்துவது உட்பட பல்வேறு முறைகளில் தங்கம் கடத்தப்படுவதை முறியடிப்பதில் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315943&reg=3&lang=1

***

TV/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316190) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Telugu