இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தில் இளைஞர்களின் தீவிர செயல்பாடுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 4:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.09.2026) தமது மாதாந்திர வானொலி உரை நிகழ்ச்சியான 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 138-வது அத்தியாயத்தில், போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தில் நாடு முழுவதும் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு எதிராக உறுதியேற்றுள்ளதாகவும், மற்றவர்களிடையே விழிப்புணர்வைப் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான 100 வார கால போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் தலைமையிலான தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குறிப்பாக 'போதைப்பொருள் ஒழிப்பு' முன்முயற்சியைப் பாராட்டினார். இளைஞர்கள், போதைப்பொருளுக்கு எதிரான செய்தியைத் தத்தமது மொழிகளிலும், தமக்கே உரிய படைப்பாற்றல் வெளிப்பாட்டு வடிவங்கள் மூலமாகவும் சமூகங்களிடம் கொண்டு சேர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சாரத்திற்குத் தங்கள் படைப்பாற்றலை வழங்குமாறு முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் இளைஞர்களுக்கு விடுத்த வேண்டுகோளை நினைவு கூர்ந்த பிரதமர், அதற்கு நாடு முழுவதிலுமிருந்து கிடைத்த வரவேற்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315566&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315632) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada