மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடைகள் காப்பீட்டுக்கான இணையதளம் - நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 3:17PM by PIB Chennai
மத்திய அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை, நாட்டில் கால்நடைகளுக்கான காப்பீட்டு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நடவடிக்கையாக நாளை, (2026 செப்டம்பர் 28) புதுதில்லியில் கால்நடை காப்பீட்டு சேவைகளுக்கான இணையதளத்தைத் தொடங்குகிறது. மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இந்த இணையதளத்தை தொடங்கி வைக்கிறார்.
கால்நடை வளர்ப்புத் துறையின் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விலங்குகளுக்கு, இந்த இணையதளம், ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவைகளை வழங்கும். இது பாலிசி வழங்குதல், கோரிக்கை செயலாக்கம், கண்காணிப்பு ஆகியவற்றை நெறிப்படுத்த உதவும். பரந்த அணுகலையும் எளிதான பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில், இந்த இணையதளத்தின் சேவைகள் இந்தி, ஆங்கிலம் தவிர 11 பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும். இதன் மூலம் கால்நடை விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற மொழியில் தகவல்களையும் சேவைகளையும் பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315538®=3&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315630)
வருகையாளர் எண்ணிக்கை : 9