மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம் அக்டோபர் 16 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 8:48AM by PIB Chennai

மத்திய அரசில் பல்வேறு பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது.

​இது குறித்த விரிவான விளம்பரம் (எண். 12/2026), விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://upsc.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக 2026 செப்டம்பர் 26 முதல் 2026 அக்டோபர் 16 வரை விண்ணப்பிக்கலாம்.

​அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

​மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315209&reg=3&lang=1

****

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315281) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati