ரெயில்வே அமைச்சகம்
வதோதரா பிரிவில் உள்ள அல்காபுரியில் ரூ.166.5 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 3:21PM by PIB Chennai
மேற்கு ரயில்வேயின் வதோதரா பிரிவில் உள்ள அல்காபுரியில் மாநில அரசுடன் செலவைப் பகிர்ந்து கொள்ளும் அடிப்பைடயில், ரூ.166.5 கோடி செலவில் நான்கு வழித்தடங்களை கொண்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்கான மொத்த செலவை இந்திய ரயில்வேயும், மாநில அரசும் சமமாக பகிர்ந்துகொள்ளும். அதன்படி, இந்திய ரயில்வேயும், அம்மாநில அரசும் தலா ரூ.83.2769 கோடியை பங்களிப்பு செய்யவுள்ளன.
வதோதரா ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள தற்போதைய அல்காபுரி ரயில்வே சுரங்கப்பாதை வதோதரா நகரத்தின் அல்காபுரி, கலாக்கோடா பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கியமான கிழக்கு - மேற்கு சாலை இணைப்பாகச் செயல்படுகிறது. தற்போதுள்ள சுரங்கப்பாதை சுமார் 3.0 மீட்டர் மட்டுமே உயரம் கொண்டதாக உள்ளதால், பெரிய வாகனங்களின் இயக்கத்திற்குத் தடை ஏற்படுவதுடன், மழைக்காலங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கும் பிரச்சனையும் உண்டாகிறது.
இது கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை அளிக்கிறது. புதிய நான்கு வழி மேம்பாலம் அமைப்பதன் மூலம் இந்த சிரமங்களுக்குத் தீர்வு காண்பதோடு, சாலை இணைப்பும் மேம்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314366®=3&lang=1
****
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314560)
வருகையாளர் எண்ணிக்கை : 11