சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா, ஆரோக்கிய ஆய்வுக் கூட்டத்தை நாளை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 4:29PM by PIB Chennai

மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா ஆரோக்கிய ஆய்வுக் கூட்டத்தை நாளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார்.  

தேசிய சுகாதார ஆணையம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 8 ஆண்டுகள் நிறைவையும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் திட்டத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவையும் ஒட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சுகாதார உத்தரவாதம், டிஜிட்டல் சுகாதாரம் ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் குறித்த தலைப்புகள் சார்ந்த விவாதங்கள் இடம்பெற உள்ளன. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகிய பிரிவுகளின் கீழ் பல்வேறு அமர்வுகள் நடைபெறும்.

நாட்டின் டிஜிட்டல் சுகாதாரம், சுகாதார உத்தரவாத சூழலை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முன்முயற்சிகள் ஆரோக்கிய ஆய்வுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314404&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314553) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam