பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் வுஷு மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற நௌரெம் ரோஷிபினா தேவிக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 11:19AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியின் வுஷு மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற நௌரெம் ரோஷிபினா தேவிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தொடர் சாதனைகள், துணிச்சல், உறுதிப்பாடு ஆகியவை உண்மையில் பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், அவருடைய அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
"வுஷு மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற நௌரெம் ரோஷிபினா தேவிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து, மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவருடைய தொடர் சாதனைகள், துணிச்சல், உறுதிப்பாடு ஆகியவை உண்மையில் பாராட்டத்தக்கது.
அவருடைய அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் தமது வாழ்த்துகள்."
***
(Release ID: 2314259)
SS/IR/RJ/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2314422)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam