பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேர்மையான, இனிமையான, நன்மை பயக்கக்கூடிய பேச்சுக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 9:02AM by PIB Chennai

சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நேர்மையான, இனிமையான, நன்மை பயக்கக்கூடிய, ஒழுக்கத்தை கடைபிடிக்கக்கூடிய பேச்சுக்களின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

"ஒருவர், எவருடைய மனதிலும் களங்கத்தை ஏற்படுத்தாமல் எப்போதும் நேர்மையான, இனிமையான, நன்மை பயக்கக்கூடிய வார்த்தைகளையே பேச வேண்டும். புனிதமிக்க ஞானத்தைத் தொடர்ந்து பயில்வதும், பிரதிபலிப்பதும், ஒருவருடைய பேச்சை மேம்படுத்தி உண்மையான நோக்கத்தை அளிக்கிறது. சிந்தனைமிக்க பேச்சுக்கள், சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை பரப்புகிறது." 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314230&reg=3&lang=1

***

SS/IR/RJ/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314386) வருகையாளர் எண்ணிக்கை : 11