பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துடுப்புப் படகு ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 9:50AM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துடுப்புப் படகு ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்த சத்னம் சிங், சல்மான் கான் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய நிதானமும், ஒருங்கிணைப்பும் தனித்து வெளிப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி வரும் ஆண்டுகளில் அவர்கள் மேலும் சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"துடுப்புப் படகு ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்னம் சிங், சல்மான் கான் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளனர்.

அவர்களுடைய நிதானமும், ஒருங்கிணைப்பும் தனித்து வெளிப்பட்டது. இந்த வெற்றி வரும் ஆண்டுகளில் அவர்கள் மேலும் சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கும்."

***

(Release ID: 2314234)

SS/IR/RJ/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314355) வருகையாளர் எண்ணிக்கை : 9