விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நீர்ப்பிடிப்பு மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான கலந்தாய்வுக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 11:14AM by PIB Chennai

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மழை நீர்ப்பிடிப்பு பகுதி ஆணையம், புதுமையான மேம்பாட்டின் மூலம் வேளாண் மீள்திறனுக்காக நீர்நிலைகளுக்குப் புத்துயிரூட்டுதல் (ரிவார்ட்) திட்டத்தின் கீழ், தேசிய அளவிலான தொழில்நுட்பக் குழுவின் கூட்டத்தை 2026 செப்டம்பர், 22 அன்று புதுதில்லியில் நடத்தியது.

கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த, மாநில அளவிலான முதன்மை முகமைகளின் விஞ்ஞானிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 45 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, இம்மாநில அரசுகள், தங்களது நீர்ப்பிடிப்புத் தரவுகளையும் முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பையும் அனைத்துப் பங்குதாரர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

திட்டச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான காலக்கெடுவை 6 மாதங்களில் இருந்து 3 மாதங்களாகக் குறைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313738&reg=3&lang=1

***

TV/KS/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2314115) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati