பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதைச் செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 11:31AM by PIB Chennai

தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கரின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதைச் செலுத்தினார்.

பொது உணர்வு, தேசிய பெருமிதம் ஆகியவை நிறைந்த அவருடைய உணர்வுப் பூர்வமான கவிதைகள், தற்போதும் நாட்டு மக்களின் எண்ணங்களில் வீரத்தையும், சுயமரியாதையையும் ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடையப் படைப்புகள் இலக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, தாய்நாட்டின் மீதான பற்றுக்கும் உத்வேகம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய சிறப்புமிக்க ஆளுமையும், காலத்தால் அழியாத படைப்புகளும் எதிர்காலத்திலும் மக்களுக்கு வழிகாட்டியாக திகழும் என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313741&reg=3&lang=1

***

Release ID: 2313741

SS/IR/SM/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2314094) வருகையாளர் எண்ணிக்கை : 6