பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதல் மகளிர் ஸ்கீட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 12:50PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மகளிர் ஸ்கீட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால், மகேஸ்வரி சௌகான், ரைசா தில்லான் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய கவனம், துல்லியம், அணி ஒருங்கிணைப்பு ஆகியவை இந்திய விளையாட்டுத் துறைக்கு மற்றொரு பெருமைமிகு தருணத்தை அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"மகளிர் ஸ்கீட் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால், மகேஸ்வரி சௌகான், ரைசா தில்லான் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

அவர்களுடைய கவனம், துல்லியம், அணி ஒருங்கிணைப்பு ஆகியவை இந்திய விளையாட்டுத் துறைக்கு மற்றொரு பெருமைமிகு தருணத்தை அளித்துள்ளது. அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

***

Release ID: 2313775

SS/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2313944) வருகையாளர் எண்ணிக்கை : 4