ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்: திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 6:27PM by PIB Chennai

9-ஆவது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026 மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

“காலநிலையை தாங்கும் நீர் மேலாண்மை” என்ற கருப்பொருளில் செப்.22 முதல் 26 வரை நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா, நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் இயற்கை வளங்களின் மீதான அழுத்தத்தால் நீர் பாதுகாப்புக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை, புதிய தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பங்கேற்பு அவசியம் என வலியுறுத்தினார். நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், நீர் பாதுகாப்பும் காலநிலைத் தாங்குதிறனும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தொலைநுண்ணுணர்வு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாநாட்டில் நீர், உணவு, எரிசக்தி ஒருங்கிணைப்பு, நகர்ப்புற நதிகள் மேலாண்மை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313599&reg=3&lang=1

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313679) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Malayalam