சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் வழியிலான நீர் திட்டங்களுக்கான ஒப்புதல் கட்டமைப்பை எளிதாக்க, எஸ்எஸ்என்என்எல் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 4:55PM by PIB Chennai

அலுவலகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்தவும், குஜராத் மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் வழியான நீர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு, எளிமையான, காலவரையறைக்குட்பட்ட கட்டமைப்பை நிறுவுவதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட்டும் (எஸ்எஸ்என்என்எல் - SSNNL) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், விரைவான ஒப்புதல்களை எளிதாக்குவதையும், தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்புடைய நீர்ப்பாசன உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எஸ்எஸ்என்என்எல்-ன் இயக்குநர்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதன் கீழ் வரும் அனைத்து தேசிய நெடுஞ்சாலை, கால்வாய் குறுக்கீடுகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், எஸ்எஸ்என்என்எல் ஆகிய நிறுவனங்கள் பரஸ்பரம் பல்வேறு கட்டணங்கள், வரிகள், இதர தீர்வைகளைத் தள்ளுபடி செய்வதாகும். இந்த ஏற்பாடு, திட்டச் செலவுகளைக் குறைக்கவும், தேவையற்ற நடைமுறைகளைத் தவிர்க்கவும் உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313520&reg=3&lang=1

(Release ID: 2313520)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313637) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati