தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை, இயக்கத்தின் கீழ் புதுதில்லியில் பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 3:54PM by PIB Chennai

தூய்மையே சேவை 2026-ன் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கான உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது.

புதுதில்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையுடன் இணைந்து இந்த சுகாதார முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்துகொண்ட அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு மருத்துவ குழுவினர், உடல் நல பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

பத்திரிகை தகவல் அலுவலக பணியாளர்களிடையே  உடல் நல பராமரிப்பு, பொதுவான நலவாழ்வை ஊக்குவித்தல் ஆகியவை இம்முயற்சியின் நோக்கமாக இருந்தது. இதில் தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரம், நலன் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. தங்களுடைய உடல்நலனை பரிசோதிக்கவும், மருத்துவக் குழுவினரிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த சுகாதார முகாம் தூய்மையே சேவை 2026 திட்டத்தின் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான முகாம் என்ற அடிப்படையின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் தூய்மைப் பணியாளர்களின் நல வாழ்வு வலியுறுத்தப்படுகிறது.

தூய்மையே சேவை 2026 திட்டமானது மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313441&reg=3&lang=1

***

TV/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313629) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Malayalam