பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் 7- வது உயர்மட்டக் குழு கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 2:38PM by PIB Chennai
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் 7-வது உயர்மட்டக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இதில், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் பொதுச்செயலர் திரு ஹைதம் அல் கெய்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி தேவை அதிகரிப்பில் இந்தியாவின் முக்கியப் பங்களிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் மத்திய பெடரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசும்போது, முக்கிய எரிசக்திப் பிரச்சினைகளில் ஒத்துழைக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பையும் அதன் உறுப்பு நாடுகளையும் இந்தியா மதிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா, வரும் தசாப்தங்களில் எரிசக்தித் தேவையின் முக்கிய உந்து சக்தியாகத் தொடரும். முதலீட்டை ஆதரிக்கவும்,உலகளாவிய வளர்ச்சி, நம்பகமான எரிசக்தி வழங்கலை உறுதி செய்யவும், உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே தொடர்ச்சியான உரையாடல் அவசியம் என்றார். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் பொதுச்செயலர் திரு ஹைதம் அல் கெய்ஸ் பேசும்போது, இந்தியாவின் முக்கியத்துவம் இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த தசாப்தத்தில் அதிகரிக்கும் என்றார். இந்தப் பேச்சுவார்த்தையின் நிறைவில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு-இந்திய பெட்ரோலிய அமைச்சக 8-வது உயர்மட்டப் பேச்சுவார்த்தையை ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக்காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313398®=3&lang=1
TV/MM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313621)
வருகையாளர் எண்ணிக்கை : 9