வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல், ரஷ்ய வர்த்தக அமைச்சர் திரு ஆன்டன் அலிகானோவ் ஆகியோர் இன்னோபிரோம் இந்தியா நிகழ்வில் என்ஐசிடிசி அரங்கைப் பார்வையிட்டனர்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 8:45PM by PIB Chennai
மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல், ரஷ்ய வர்த்தக அமைச்சர் திரு ஆன்டன் அலிகானோவ் ஆகியோர், தங்களது இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து, இன்னோபிரோம் (INNOPROM) இந்தியா 2026 கண்காட்சியின் இரண்டாம் நாளில், புது தில்லி, பாரத் மண்டபத்தில் உள்ள தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (என்ஐசிடிசி NICDC) அரங்கைப் பார்வையிட்டனர்.
அமைச்சர்கள் என்ஐசிடிசி குழுவினருடன் கலந்துரையாடினர். மேலும், இந்தியாவின் தொழில்துறை, உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட முக்கிய முன்முயற்சிகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டம், தொழில்துறை ஸ்மார்ட் நகரங்கள், பிரதமரின் மித்ரா பூங்காக்கள், பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா ஆகியவற்றில் தனது பணிகளை என்ஐசிடிசி முன்வைத்தது.
இந்தக் கலந்துரையாடல், உற்பத்தி, தொழில்துறை தொழில்நுட்பம், உள்நாட்டுமயமாக்கல், முதலீடு ஆகிய துறைகளில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308914®=3&lang=1
***
SS/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313360)
வருகையாளர் எண்ணிக்கை : 19