பாதுகாப்பு அமைச்சகம்
மீள்திறன், வலிமை, புத்தாக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 3:29PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் மக்களிடையை மீள்திறன், உறுதிப்பாடு, கருணை, புத்தாக்கம், வலிமை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் இன்று (18.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விடாமுயற்சி, மக்களின் பாதுகாப்பு, சேவை மனப்பான்மை, இலக்குகளை அடைவதற்கான உறுதிப்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற இந்தியாவின் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த மாண்புகளிலிருந்து உத்வேகம் பெற்று வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டிற்கு முன்பு ஊழல், நிர்வாகச் சீர்கேடு போன்ற குறிப்பிடத்தக்க சவால்களை இந்தியா எதிர்கொண்டதாகவும் அவை மக்களின் மன உறுதியை குலைத்தாகவும் அவர் கூறினார். கடந்த 12 ஆண்டுகளில் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு அவற்றை வாய்ப்புகளாக மாற்றுவதில் நாட்டின் முன்னேற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உலகளவில் நிச்சயமற்ற சூழல் இருந்தபோதிலும் தற்சார்பு, வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதற்கான பாதையில் இந்தியா சீரான முன்னேற்றம் கண்டு வருவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311993®=3&lang=1
***
TV/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313197)
வருகையாளர் எண்ணிக்கை : 10