ஆயுஷ்
ஆயுர்வேத தினத்தையொட்டிய செயல்பாடுகளில் மக்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 3:33PM by PIB Chennai
நாடு முழுவதும் 11-வது ஆயுர்வேத தினம் செப்டம்பர் 23 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி “நலமான எதிர்காலத்திற்கு ஆயுர்வேதம்” என்ற கருப்பொருளுடன் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 9,700-க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன. அதிகாரப்பூர்வ ஆயுர்வேத தின இணையதளம் மூலம் 3.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். சுமார் 89.3 லட்சம் பேர், ஆயுர்வேதத்திற்கு ஆதரவாக உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
ayurvedaday.org.in என்ற முகவரியில் உள்ள ஆயுர்வேத தினம் 2026 மைக்ரோ சைட் என்பது, மக்களின் பங்கேற்பு, பதிவு, தகவல் அளித்தல் ஆகியவற்றுக்கான ஒரு மின்னணு தளமாக செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312969®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313169)
வருகையாளர் எண்ணிக்கை : 9