பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிறந்த தின வாழ்த்துகள், அன்பு, ஆசிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 10:40PM by PIB Chennai

இன்று தனது பிறந்த தினத்தையொட்டி, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்து கிடைத்த வாழ்த்துகள், அன்பு,  ஆசிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அன்பான ஒவ்வொரு வார்த்தையையும், தாம் பெரிதும் மதிப்பதாகவும், மக்களுக்குச் சேவையாற்றுவதற்கான புதிய ஆற்றலை அவை தமக்கு அளிப்பதாகவும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாள் முழுவதும் மக்கள் சேவை தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை ஈட்டுவதில், அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி  பதிவிட்டுள்ளதாவது:

நாடு முழுவதிலுமிருந்து குவிந்துள்ள வாழ்த்துகள், அன்பு, ஆசிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்பான ஒவ்வொரு வார்த்தையையும், நான் பெரிதும் மதிக்கிறேன். அவை மக்களுக்குச் சேவை செய்வதற்கான புதிய ஆற்றலை எனக்கு அளிக்கின்றன.

நாள் முழுவதும் மக்கள் சேவையில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.

----

(Release ID:2311730)

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313119) வருகையாளர் எண்ணிக்கை : 10