தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சிம்கார்டுகளை முறைகேடான வகையில் வழங்குதல், தொலைத்தொடர்பு அடையாளங்களைத் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக தொலைத்தொடர்புத் துறை எச்சரித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 12:23PM by PIB Chennai
சிம்கார்டுகளை முறைகேடான வகையில் வழங்குதலுக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் தொலைத்தொடர்புத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இணையவழிக் குற்றம் தொடர்பான விசாரணைகளில், சத்தீஸ்கரில் உள்ள ஒரு விற்பனையாளர் குடிமக்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு தெரிந்தோ அல்லது ஒப்புதல் இன்றியோ 25 மொபைல் இணைப்புகளை(சிம் கார்டு) சட்ட விரோதமாக செயல்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, தொலைத்தொடர்புத் துறையும், தொலைத்தொடர்பு வழங்குநர்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட விற்பனையாளரை கருப்புப் பட்டியலில் சேர்த்தனர். இதன்மூலம், எதிர்காலத்தில் அவர் மொபைல் இணைப்புகளை (சிம் கார்டுகள்) வழங்குவது தடுக்கப்பட்டது. பின்னர் இந்த 25 மொபைல் இணைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
முறைகேடான வகையில் சிம்கார்டுகளை வழங்குதல், தொலைத்தொடர்பு அடையாளங்களைத் தவறாக பயன்படுத்துதல் அல்லது ஐஎம்இஐ எண்களை திருத்துதல் ஆகியவை 2023-ம் ஆண்டு தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தொலைத்தொடர்புத் துறை மீண்டும் கூறியுள்ளது. இதை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் தங்களுடைய மொபைல் இணைப்புகளையும் கைப்பேசிகளையும் சரிபார்த்து பாதுகாக்க சஞ்சார் சாத்தி இணையப்பக்கத்தையும் மொபைல் செயலியையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312868®=3&lang=1
***
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313077)
வருகையாளர் எண்ணிக்கை : 11