அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இளைஞர்களுக்கான அறிவியல் விநாடி-வினா போட்டி அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 1:12PM by PIB Chennai
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் 85-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தையொட்டி, மத்திய அறிவியல், தொழிநுட்பத்துறை அமைச்சகம், இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சம் ஆகியவை இணைந்து அறிவியல் விநாடி- வினா போட்டியை அறிவித்துள்ளது. மை பாரத் இணையதளத்தின் வாயிலாக 2026 செப்டம்பர் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய குடிமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் சாதனைகள், தொழில்நுட்ப அம்சங்கள், நவீனத்துவம், கல்வி நிறுவங்களுக்கான பங்களிப்பு குறித்தக் கேள்விகள் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், வேளாண்மை, சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, எரிசக்தி, விமானப் போக்குவரத்து, உயிரித் தொழில்நுடப அறிவியல் உள்ளிட்டவைகளில் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் பணிகள் தொடர்பாகவும் கேள்விகள் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் விநாடி- வினா போட்டியின் மூலம், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடியும். போட்டியில் பங்கேற்பவர்கள் அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆய்வகங்களுக்கு சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வரும் மாதங்களில் தொடர்ந்து விநாடி- வினா போட்டிகளை நடத்தவும் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312900®=3&lang=1
***
SS/LN/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313024)
வருகையாளர் எண்ணிக்கை : 10