பிரதமர் அலுவலகம்
செமிகான் இந்தியா 2026 நிகழ்வின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 8:00PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2026 நிகழ்வின் சிறப்பம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்நிகழ்வின் 5-வது பகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் இதில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த சர்வதேச பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ள விருந்தினர்களுக்கு தான் சிறப்பான வரவேற்பு அளிப்பதாக என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
இந்தியாவின் செமிகண்டக்டர் சார்ந்த உற்பத்தி சூழல் விரைவாக விரிவடைகிறது. இது புதுமைக்கண்டுபிடிப்பு, முதலீடு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. புதுதில்லியில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2026 நிகழ்வில் உரையாற்றுகிறேன்.
செமிகான் இந்தியா 2026 நிகழ்வில் உள்ள உற்சாகத்தை நேரில் பார்க்கும்போது மட்டுமே நம்மால் நம்ப முடியும்!
செமிகண்டக்டர் போன்ற துறையில் இந்தியா தனது முயற்சிகளை விரிவுபடுத்தி வருவது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
***
(Release ID: 2311913)
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313005)
வருகையாளர் எண்ணிக்கை : 7