திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஷாங்காய் சர்வதேசத் திறன் போட்டி 2026-ல் பங்கேற்க இந்தியாவின் திறன்மிகு இளைஞர் குழு வழியனுப்பிவைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 7:01PM by PIB Chennai
ஷாங்காய் சர்வதேசத் திறன் போட்டி 2026-ல் பங்கேற்பதற்கு இந்தியாவின் திறன்மிகு இளைஞர் குழு வழியனுப்பி வைக்கப்பட்டது.
சீனாவின் ஷாங்காய் நகரில் 2026 செப்டம்பர் 22 முதல் 27 வரை நடைபெறவுள்ள 48-வது சர்வதேசத் திறன் போட்டியில், 63 திறன் பிரிவுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த, 70 திறமையான இளம் போட்டியாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய குழு பங்கேற்கவுள்ளது. தொழில்நுட்பத் திறன், படைப்பாற்றல், துல்லியம், புத்தாக்கம் மற்றும் கைவினைத் திறன் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை இந்தப் போட்டியாளர்கள் உலக அரங்கில் வெளிப்படுத்துவார்கள்.
இந்த விழாவில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்துறை
இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சௌத்ரி, உத்தரப்பிரதேச அரசின் தொழிற்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சர் திரு கபில் தேவ் அகர்வால், தில்லி அரசின் உள்துறை, கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, உயர்கல்வி மற்றும் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை அமைச்சர் திரு ஆஷிஷ் சூட், நாடாளுமன்ற உறுப்பினரும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவருமான திரு நவீன் ஜிண்டால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய குழுவினரிடம் உரையாற்றிய திரு ஜெயந்த் சௌத்ரி, “ உலகின் தலைசிறந்த நபர்களுடன் போட்டியிடத் தயாராக இருக்கும், தன்னம்பிக்கை, படைப்பாற்றல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சுறுசுறுப்பான ஒரு தலைமுறையை இந்திய அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நவீன காலத் திறன்களில் நமது பங்கேற்பு, இந்தியாவின் திறன் மேம்பாட்டுச் சூழலியலின் வளர்ந்து வரும் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படி, திறன் போட்டிகள், மாநிலங்கள் மற்றும் தொழில்துறையுடனான வலுவான கூட்டாண்மைகள் மூலம் அரசு திறன் மேம்பாட்டைப் பெரிய அளவில் முன்னேற்றுகிறது”, என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310605®=3&lang=1
***
TV/RB/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312874)
வருகையாளர் எண்ணிக்கை : 9