எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி வளம் குறித்த ஜி20 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பங்கேற்று உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2026 12:27PM by PIB Chennai
எரிசக்தி வளம் குறித்த ஜி20 செயற்குழுக் கூட்டங்களில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால், பங்கேற்றார்.
ஹூஸ்டனில் 2026 செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய அவர், எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, கனடா நாடுகளின் துறை சார்ந்த மூத்த தலைவர்களுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட எரிசக்தி உற்பத்தி அமைப்பை உருவாக்குவதில், இந்தியா அடைந்துள்ள விரைவான முன்னேற்றத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.
552 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறன், 50%-க்கும் அதிகமான புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தி, சூரியசக்தி, சேமிப்பு, அணுசக்தி, தூய்மை சமையல் எரிவாயு வசதி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சாதனை அளவிலான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் பட்டியலிட்டார்.
தொழில்நுட்ப சார்பற்ற, அனைவரையும் உள்ளடக்கிய எரிசக்தி உற்பத்திக்கான வழி முறைகள், சர்வதேச சூரிசக்தி கூட்டமைப்பு, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம், உலகளவில், ஒத்துழைப்புக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310739®=3&lang=1
***
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312863)
வருகையாளர் எண்ணிக்கை : 24