பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெருகிவரும் வாய்ப்புகள் இந்தியர்களைத் தங்கள் பெரிய கனவுகளை நனவாக்க எவ்வாறு உதவுகின்றன என்பதை விளக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 2:31PM by PIB Chennai

பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி. சிந்து எழுதிய கட்டுரை ஒன்றை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில், புதிய தலைமுறை இந்தியர்கள் தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகளும் வழிகளும் எவ்வாறு விரிவடைந்துள்ளன என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவில் திறமைக்கு ஒருபோதும் பற்றாக்குறை கிடையாது என்றும், பெருகிவரும் வாய்ப்புகள் இந்தியர்களைப் பெரிய அளவில் கனவு காணவும், அக்கனவுகளை நனவாக்கவும் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் இக்கட்டுரை சுட்டிக் காட்டுவதாகத் திரு. மோடி குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"இந்தியாவில் திறமைக்கு ஒருபோதும் பற்றாக்குறை கிடையாது. பெரிய கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகளும் வழிகளுமே பெரும்பாலும் இல்லாமல் இருந்தன.

பி.வி. சிந்து எழுதியுள்ள இந்தக் கட்டுரையில், கடந்த 12 ஆண்டுகளில் இச்சூழ்நிலை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது, இது புதிய தலைமுறை இந்தியர்களைப் பெரிய அளவில் கனவு காணவும், அக்கனவுகளை நனவாக்கவும் வழிவகுத்துள்ளது."

***

(Release ID: 2311309)

TV/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2312856) வருகையாளர் எண்ணிக்கை : 7