நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த நுகர்வோர் சர்க்கரைக் கையிருப்பு வைக்கும் காலவரம்பை 30 நாட்களாக தளர்த்தி அரசு உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 2:47PM by PIB Chennai

வியாபாரிகள், மொத்த நுகர்வோருக்கான சர்க்கரை கையிருப்பு வரம்பை 30 நாட்களாக உயர்த்தி மத்திய அரசு தளர்வு அளித்துள்ளது.

பண்டிகைக் காலங்களைக் கருத்தில் கொண்டு சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், முறையற்ற வகையில்  சேமித்து வைப்பதைக் கட்டுப்படுத்தவும் வியாபாரிகளுக்கான மொத்த சர்க்கரை கையிருப்பு வைக்கும் காலவரம்பை 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் சில்லரை விற்பனையில் சர்க்கரையின் விலை 10% வரை குறைந்ததையடுத்து, அரசின் முன் அங்கீகார திட்டம் மற்றும் கட்டண விகித ஒதுக்கீட்டின் மூலம் இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையை 30 நாட்கள் வரை மொத்த வியாபாரிகள் கையிருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம், உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் சர்க்கரையின் கையிருப்பு வரம்பு மாற்றமின்றி 15 நாட்கள் என்ற அளவிலேயே தொடர்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

மேலும், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இணையதளத்தின் மூலம்மொத்த நுகர்வோர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்களது சர்க்கரை கையிருப்பை அறிவிக்கும் வகையிலான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் சா்க்கரையை கையிருப்பு வைத்துப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தற்போது 15 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் வரை சர்க்கரை கையிருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் புதிய அறிவிப்பால் கூடுதல் அளவு சர்க்கரை கையிருப்பு வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோவுக்கு 10% வரை விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி நடவடிக்கை காரணமாக சர்க்கரையின் ஆலை விலை சுமார் 25% வரை குறைந்துள்ளதால் அதன் தாக்கம் விரைவில் சில்லரை விற்பனை விலையில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.  

மேலும், கரும்பு விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்கும் புதிய சர்க்கரைப் பருவத்தில், கரும்பு குவிண்டாலுக்கு ரூ.365ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311960&reg=3&lang=1

***

SS/AC/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2312244) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam