பிரதமர் அலுவலகம்
தொழில்நுட்பம், நம்பிக்கை, மக்களின் பங்களிப்பை மையமாகக் கொண்ட நிர்வாக மாதிரியை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 1:39PM by PIB Chennai
இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க திட்டங்களைச் செயல்படுத்தும் போது தொழில்நுட்பம், நம்பிக்கை, மக்களின் பங்களிப்பு ஆகியவற்றைப் பிரதமர் எவ்வாறு தனது நிர்வாக மாதிரியில் மையமாகக் கொண்டுள்ளார் என்பதை விளக்கும் நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபாவின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
டிஜிட்டல் அமைப்புகள், நேரடிப் பலன் பரிமாற்றங்கள், எளிமையான விதிமுறைகள், வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகள் ஆகியவை எவ்வாறு செயல்திறனையும், சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்தி நிர்வாகத்தை இந்திய வளர்ச்சிக்கு ஒரு பொருளாதாரச் சொத்தாக மாற்றுகின்றன என்பதைத் திரு கௌபா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க அளவில் திட்டங்களைச் செயல்படுத்தும் போது தொழில்நுட்பம், நம்பிக்கை, மக்களின் பங்களிப்பு ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாக மாதிரி எவ்வாறு மையமாகக் கொண்டுள்ளது என்பது குறித்து நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா எழுதியுள்ளார்.
டிஜிட்டல் அமைப்புகள், நேரடிப் பலன் பரிமாற்றங்கள், எளிமையான விதிமுறைகள், வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகள் ஆகியவை எவ்வாறு செயல்திறனையும், சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்தி நிர்வாகத்தை இந்திய வளர்ச்சிக்கு ஒரு பொருளாதாரச் சொத்தாக மாற்றுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."
***
(Release ID: 2311276)
TV/IR/GS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312180)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam