மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மாத ஊதிய உச்ச வரம்பை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 3:07PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, மத்திய தொழிலாளர், மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒரு முக்கிய முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கட்டாய சந்தா வரம்பிற்குள் வருவதற்கான மாத ஊதிய உச்ச வரம்பு ரூ15,000-லிருந்து ரூ 25,000-ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த முடிவின் மூலம், கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். இது தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு அம்சத்தை  கணிசமாக விரிவுபடுத்தும்.

2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பின்னர் செப்டம்பர் 2014-ல் இது கணிசமாக உயர்த்தப்பட்டு ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஊதிய உயர்வு, வருமான அதிகரிப்பு, முறைசார் வேலைவாய்ப்பின் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த உச்ச வரம்பை மேலும் ரூ 25,000-ஆக உயர்த்துவதன் மூலம், தற்போதைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310811&reg=3&lang=1   

----

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312090) வருகையாளர் எண்ணிக்கை : 52