கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேச நலனும், மக்கள் சேவையுமே நோக்கமாகக் கொண்டவர் பிரதமர் திரு நரேந்திர மோடி : மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 10:29AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதாகவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முயற்சிகளில் மக்களின் பங்களிப்பு சீரிய முறையில் இருப்பதாகவும் மத்திய கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி தில்லியில் உள்ள புராண கிலா வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆசீர்வாதத்தின் தீபம் என்ற தலைப்பில் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தேச நலனுக்காகவும், மக்கள் சேவைக்காகவும் தனது பொது வாழ்வை அர்ப்பணித்தவர் பிரதமர் திரு நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார்.

மேலும், தனக்குக் கிடைத்த அனைத்துப் பொறுப்புகளிலும் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மற்றும் நோக்கத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்படுவதாகத் தெரிவித்தார்.

குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தற்போது பிரதமராக நாட்டை வழிநடத்துவது வரை, தேசம், மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றின் மீது மிக உறுதியுடன் தொடர்ந்து அவர் பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு பொது வாழ்வில் தனக்குக் கிடைத்த பெருமைக்குரிய அனுபவம் என திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். நாட்டின் பிரதமராக மட்டுமின்றி அர்ப்பணிப்புள்ள பணியாளராகவும், சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி திகழ்கிறார் என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311804&reg=3&lang=1

***

SS/ AC /SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2311975) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu